பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380

380

பாடல்கள்

செய்யுளால் நிகண்டு இயற்றிய பழைய ஆசிரியர் களின் மரபை யொட்டி, வீரமா முனிவரும், செய்யுள் நடையில் இல்லாத தமது சதுரகராதியின் தொடக்கத் தில் செய்யுளாலேயே சிறப்புப்பாயிரம் இயற்றியுள் ளார்; மற்றும், சதுரகராதியின் ஒவ்வொரு தொகுதி யையும் தொடங்குவதற்கு முன்பும், கடவுள் வணக்க மும் தொகுதி விவரமும் அறிவிக்கும் செய்யுள் பாடி யமைத்துள்ளார். நூலின் இறுதியிலும் முடிவுரைப் பாடலொன்று பாடியுள்ளார். இ த் தா லி காட்டு பெஸ்கி தமிழ்ப் புலவராகவே மாறிவிட்டதை நோக் கின் வியப்பேற்படுகிறது. இனி முறையே அந்தப் பாடல்கள் வருமாறு :

சிறப்புப் பாயிரம்

மூவுல கனத்து முயன்றடி யேத்த யாவுல கனத்து மேந்தியாள் கடவுளைப் பணிந்துநான் சூடிய பதமல ருலகெலா மணிந்து வாழ்த்த வருந்தமி முைம்பொருண் முன்னு றெளிந்து முன்னர்த் தந்த தொன்னூல் விளக்கந் துதித்துக் கொண்டனர் நூற்பதக் கருவியா நூங்கென வேண்டு நாற்பத விளக்கமு நவில்கென வேண்ட யாப்புற மறைவுறு மென்றுணர்ந் தொளிபெறப் பாப்புறத் தவைதனிப் பகர்ந்தக ராதியா வவ்வப் பெயர்ப்பொரு ளவ்வவ் பொருட்பெயர் காட்டிய பின்னர் மீட்டியை வழக்கொடு தொகைவரும் பலபொருள் வகைவர விளக்கியு முதல்வரு மெழுத்தொழி முழுதெலா மொன்றி நுதல்வரும் பதமொரு நுண்டொடை யாக்கியும் பெயர்பொரு டொகை தொடைபிரித்த நான்முகத்