பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388

388

இதன் விளக்கம் வருமாறு:- அன்று ரோமானியர்கள் இலத்தீன் எழுத்தினாலேயே எண்களைக் குறிப்பிட்டு வந்தார்கள்.

M என்றால் ஆயிரம் 1000 D என்றால் ஐந்நூறு 500 C என்றால் நூறு 100 C என்றால் நூறு 100 L என்றால் ஐம்பது X என்றால் பத்து X என்றால் பத்து - IX என்றால் ஒன்பது

50

ஆக, M D C C L.XXIX என்றால் =

1779 ஆகும்.

இவ்வகராதியின் இரண்டாம் பதிப்பு, 'ரெவரன்ட் பொய்சால்டு' (Rev. Mr. Poezold), 'வில்லியம் சிம்சன்' (Mr. William Simpson) ஆகியோரால் ஒழுங்கு செய்யப் பட்டு 1809 - ஆம் ஆண்டில் அதே வேப்பேரியில் அச்சிடப்பட்டது.

இவ்வகராதியில், வரிகிறது, வரிந்து போடுகிறது என்பன போன்ற வினையுருவங்களும் கொடுக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.