பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

391

391

சொல்லாலும் பொருள் கூறப்பட்டுள்ளது. இதனை 1830- ஆம் ஆண்ட ளவில் ராட்லர் (Dr. J. P. Rottler) என்பவர் தொகுத்தார். இது நான்கு தொகுதிகளை யுடையது. சதுர் அகராதியிலிருந்து மிகுந்த அளவில் சொற்பொருள்களை இவ்வகராதி எடுத்துக்கொண் டுள்ளது. இதன் முதல் தொகுதி வேப்பேரியில் 1834 - ஆம் ஆண்டிலும், இரண்டாம் தொகுதி 1837 - இலும், மூன்றாம் தொகுதி 1839-இலும், நான்காம் தொகுதி 1841 - இலும் பதிப்பிக்கப்பட்டன. இப்பதிப்புக் களில், தாய்லர் (Rev. W, Taylor), வேங்கடாசல

முதலியார் ஆகிய இருவரும் எடுத்துக் கொண்ட பங்கு, மிகப் பெரியது.

இவ்வகராதியில், வரிகிறது, வரிந்தேன் , வரி வேன், வரிய, வரிதல், வரிக்கிறது, வரித்தேன் , வரிப் பேன், வரிக்க- என வினைச் சொல்லின் பல்வகை உருவங்களும் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்

தக்கது.

க!

வின்சுலோ ஆங்கிலம் - தமிழ் அகராதி ( வின்சுலோ (Rev. M. Winslow) என்பவரால் ஆங் கிலச் சொல்லுக்கு நேரே தமிழ்ச் சொல்லால் பொருள் T அமைக்கப்பட்ட அகராதி யிது. காலம் : 1842 - ஆம். ஆண்டு.

யாழ்ப்பாணத் தமிழ் அகராதி இது யாழ்ப்பாணத்து அறிஞர் சந்திரசேகர பாண்டி தரால் தொகுக்கப் பெற்றது. தமிழ்ச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லாலேயே பொருள் கூறும் இவ்வகராதி யில் ஏறக்குறைய எல்லாத் தமிழ்ச் சொற்களும் இடம்