பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394

394

இவ்வகராதியின் மாதிரிக்காக, இதிலுள்ள ஒரு சொற்பொருள் வருமாறு:

Abba = Pere = அப்பன், பிதா

Abba என்பது இலத்தீன் சொல் ; Pere என்பது பிரெஞ்சு சொல்; அப்பன் தமிழ்ச்சொல். Abba (அப்பா) என்றாலும், Pere (பேர்) என்றாலும் அப்பன் (தகப்பன்) என்று பொருளாம். இலத்தீனிலுள்ள அப்பா (Abba) என்னும் சொல்லும், தமிழிலுள்ள அப்பா என்னும் சொல்லும் ஒத்திருப்பதை நோக்கும்போது, பெரு. வியப்பும் பெருமகிழ்ச்சியும் தோன்றுகின்றன. இலத் தீனிலும் தமிழிலும் மொழி யடிப்படையில் ஒற்றுமை யுள்ள செய்திகள் தனி நூலாக எழுதும் அளவுக்கு மிகப் பல உள்ளன. ஈண்டு கூறின் மற்றொன்று விரித்தலாகும்.

ஒரு சொல் பல பொருள் விளக்கம் இது நிகண்டுகளின் பதினோராந் தொகுதிபோல் பெயர் உடையதாயிருக்கிறது. இதில் ஒரு சொல் லுக்குப் பொருளாகக் கொடுக்கப்பட்டிருக்கும் சொல் லுக்கும் இன்னொரு சொல்லால் விளக்கம் தரப்பட் டுள்ளது.

ஓர் எடுத்துக்காட்டு வருமாறு:

வரி = சுணங்கு = தேமல்

எழுத்து = அக்கரம் பாட்டு = இசைப் பாட்டு வாரிதி = கடல் இறை = குடியிறை நெல் = சாலி