பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

399

399

பட்டுள்ளது என்பதை ஒவ்வொரு தமிழரும் எண்ணிப் பார்த்தால், தாமும் அப் பணியைத் தொடரத் தொடங் குவர்.

தமிழ் - இலத்தீன் அகராதி தமிழ்ச் சொல்லுக்கு இலத்தீன் சொல்லால் பொருள் கூறும் இவ்வகராதியின் ஆசிரியர் ஆர்.பி. குரிபாதிரி யாரவர்கள். காலம் கி.பி. 1867.

கிளாசிகல் தமிழ் - ஆங்கில அகராதி தமிழுக்கு ஆங்கிலத்தால் பொருள் கூறும் இந்த உயர்தர (Classical Tamil English Dictionary) அகராதி, 1870- இல் , சென்னை மாநிலக் கல்வித்துறைத் தலைவரின் கண்காணிப்பின் கீழ் வெளியானது.

பதார்த்த பாஸ்கரம் (கிரந்தம் - தமிழ் அகராதி

கிரந்த எழுத்திலுள்ள சமசுகிருதச் சொற்கட்குத் தமிழ்ச் சொற்களால் பொருள் கூறும் அகராதியிது. சமசுகிருதத்தை எழுதுவதற்குத் தமிழ் மக்கள் பயன் படுத்திய ஒருவகை எழுத்துதான் கிரந்த எழுத்து எனப்படுவது. ஒரு புது மொழியின் எழுத்துக்களைக் கற்றுக்கொள்வது போலவே கிரந்த எழுத்துக்களையும் கற்றுக்கொண்டால்தான் கிரந்த நூற்களைப் படிக் கவும் கிரந்த மொழியினை எழுதவும் முடியும். ஸ, ஜ, ஷ, ஹ, க்ஷ முதலிய எழுத்துக்கள் கிரந்த எழுத்துக்களாம். இந்தக் கிரந்த எழுத்து வடிவிலுள்ள வடமொழிக்குத் தமிழால் பொருள் கூறுவது இவ்வகராதி.