பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400

40C

பத அர்த்தம் = பதார்த்தம் = அதாவது, பதங் களுக்கு அர்த்தம் = சொற்பொருள். பாஸ்கரன் = என்றால் ஞாயிறு (சூரியன்). இருட்டிலிருந்து பொருள்களை விளக்கும் ஞாயிற்றின் ஒளி போல, தெரியாத வட மொழிச் சொற்கட்குப் பொருள் விளக்குவதால் 'பதார்த்த பாஸ்கரம்' என இவ்வகராதி பெயர் பெற்றது.

இதன் ஆசிரியர் கடலூரையடுத்த திருவகீந்திர புரம் - தி க. நாராயண அய்யங்கார் என்பவர். ஆசிரி யரே நூலின் முன்னால், தற்சிறப்புப் பாயிரமாகத் தமிழில் ஓர் அகவற்பா பாடியுள்ளார்.

நூல் வெளியான காலம் ஈசுவர ஆண்டு என நூலின் முன் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 60 ஆண்டுகட்கு ஒரு முறை ஓர் ஈசுவர ஆண்டு வருகிறது. எனவே இது எந்த ஈசுவர ஆண்டு? கிடைத் துள்ள பதிப்பின் தாள்கள் மிகவும் பழமையாய்த் துளை போடப்பட்டிருத்தலின், இது கி.பி. 1937-ஆம் ஆண்டில் வந்த ஈசுவர ஆண்டாக இருக்க முடியாது; எனவே, கி.பி. 1877-ஆம் ஆண்டில் வந்த ஈசுவர ஆண்டே இது. ஆகவே இவ்வகராதியின் காலம் கி.பி. 1877 ஆகும்.

பில்டர் ஆங்கிலத் தமிழகராதி

ஆங்கிலத்துக்குத் தமிழால் பொருள் கூறும் இந்த (A Builder's Vocabulary in English and Tamil) அகராதி யின் ஆசிரியர் டி. எஸ். வீராசாமி முதலியார். காலம் கி.பி. 1880.