பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404

404

வைத்திய மூலிகை யகராதி வைத்திய மூலிகை விரிவகராதி

வைத்திய மலையகராதி இவ்வகராதிகள், பதினெண் சித்தர் அருளியதாகக் குறிப்பிடப்பட்டு இருபதாம் நூற்றாண்டின் தொடக் கத்தில் அச்சிடப்பட்டுள்ளன. ஆயினும், இவற்றை அகராதி உருவத்தில் பதினெண் சித்தர்கள் இயற்றி யிருக்க முடியாது. சித்தர்கள் இந்த நூற்றாண்டினர் அல்லர். அவர்கள் கடந்த நூற்றாண்டுகளில் செய்யுள் நடையில் மருத்துவ (வைத்திய) நிகண்டுகள் இயற்றி' யுள்ளனர். அம் மருத்துவ நிகண்டுகளில் கூறப் பட்டுள்ள சொற்களையும் அவற்றின் பொருள்களையும் (அர்த்தங்களையும்) இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் சிலர் தொகுத்து அகராதியாக உருவாக்கி அச்சிட்டனர் என்பதுதான் உண்மை .

பதினெண் சித்தர் அகராதிகளுள், வைத்திய மூலிகை விரிவகராதி, சென்னை வித்யாரத்நாகர அச்சுக் கூடத்தில் கி. பி. 1902- இல் பதிப்பிக்கப்பட்டது. வைத்திய மலையகராதி என்னும் நூல், சென்னை பத்மநாப விலாச அச்சுக் கூடத்தில் 1908- இல்

அச்சிடப்பட்டது.

1949-இல் மறு பதிப்பான வைத்திய மூலிகை விரிவகராதியைத் தொடர்ந்து, பதினெண் சித்தர் பெயரில்

அரும்பெயர் அனுபந்த அகராதி

தொகை யகராதி என்னும் அகராதிகளும் உள்ளன. மாதிரிக்காக ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சொற்பொருள் வருமாறு: