பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

405

405

வைத்திய மூலிகையகராதி - அகத்தி = ஓர் மரம். அரும்பெயர் அனுபந்த அகராதி - அக்காரப்

பட்டை = மாமரப் பட்டை - தொகையகராதி:- அகிற் கூட்டு 5 = சந்தனம்,

கற்பூரம், எரிகாசு, தேன், ஏலம். மேற்கூறிய அகராதிகளே யன்றி, ஊர்பேர் விவரம் தெரியாத அகராதிகள் சிலவும் உள்ளன. அவை. யாவன :

பச்சிலை மூலிகை அகராதி பரிபாஷை அகராதி கருப் பொருள் அகராதி மறைப்பு வெளிப்படை யகராதி

மேற் கூறிய அகராதிகளின் பெயர்களைப் பார்க்குமளவில், மருத்துவ அகராதிகளும், கலைச் சொல் லகராதிகளும் படைக்கும் முயற்சி பரவலாக இருந்தமை புலனாகும்.

ந. கதிரைவேற் பிள்ளை யகராதி இது தமிழுக்குத் தமிழ் அகராதியாகும். இந்நூற். றாண்டின் தொடக்கத்தில் ந. கதிரைவேற் பிள்ளையவர் களால் ஆக்கப்பட்டது.

பிகா

தமிழ்ச் சொல்லகராதி ( இது தமிழுக்குத் தமிழ் அகராதி. சங்க அகராதி, தமிழ்ச்சங்க அகராதி என்றுங்கூட இது அழைக்கப் படும். ஆசிரியர் இலங்கை சி. டபிள்யூ. கதிரைவேற் பிள்ளையவர்கள் காலம் 1904. தலையணை போன்ற பெரிய இவ்வகராதி மூன்று பாகங்கள் உடையது; ஏறத்தாழ .