பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

415

415

தற்காலத் தமிழ்ச் சொல் அகராதி இது ச.பவானந்தம் பிள்ளையவர்களால் தொகுக்கப் பெற்று 1925-இல் வெளியிடப்பட்டது. ஆசிரியர் தம் காலத்தில் புதிதாய் வழக்கத்துக்கு வந்த பல்வகைக் கலைச்சொற்களைத் தொகுத்துப் பொருளுடன் வெளி யிட்டதால் தற்காலத் தமிழ்ச் சொல் அகராதி' எனப் பெயரிட்டார். இதன் முதல் பதிப்பைச் சென்னை மாக் மில்லன் நிறுவனத்தார் வெளியிட்ட 1925- ஆம் ஆண் டிற்கும் இன்றைய 1965-ஆம் ஆண்டிற்கும் இடையில் இன்னும் எத்தனையோ 'தற்காலத் தமிழ்ச் சொற்கள் புதியனவாகத் தோன்றியுள்ளனவே!

சுப்பையர் ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழகராதி The Excelsior Senior School Dictionary English-English Tamil என்னும் பெயர் பொறிக்கப்பட்டுள்ள இவ்வக ராதி, ஆங்கிலத்துக்கு ஆங்கிலத்தாலும் தமிழாலும் பொருள் கூறுவது. ஆசிரியர் K. V. சுப்பையர் M. A. L. T., M. R. A. S. முதல் பதிப்பின் காலம் 1932.

ஜூபிலி தமிழ்ப் பேரகராதி தமிழுக்குத் தமிழான இவ்வகராதி, நான்கு தொகுதிகளுடன் 1386 பெரிய பக்கங்கள் கொண்ட பேரகராதியாகும். தொகுப்பாசிரியர் நெல்லை எஸ் சங்கரலிங்க முதலியாரவர்கள். முதல் பதிப்பான காலம் 935. ஆங்கில நாட்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் வெள்ளி விழாக் கொண்டாட்ட நினைவாக வெளியிடப்பட்ட தால் இது 'ஜூபிலி' என்னும் அடைமொழி பெற்ற தாம். திரு. வி. கலியாண சுந்தர முதலியார் முதலிய பெரும் புலவர்கள் பலர் இதற்குச் சிறப்புப் பாயிரம் வழங்கியுள்ளனர்.