பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

417

417

பதிப்பின் தாள் ஓரளவு நன்றாக - புதிய நிலையில் இருப்பதால் அண்மையில் வந்த ஈசுவர ஆண்டாகத் தான் இருக்கவேண்டும். அப்படியெனில் இதன் காலம் கி. பி. 1937 ஆகும்

சம்சுகிருதம் - தமிழ் அகராதி இது, சம்ஸ்கிருத எழுத்தாலேயே எழுதப்பட்டுள்ள சம்ஸ்கிருதச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லால் பொருள் கூறும் அகராதி . இதன் ஆசிரியர் 1937 - ஆம் ஆண்டில் தமிழ் - சம்ஸ்கிருத அகராதி எழுதி வெளியிட்ட அதே நே. ஈ. வேங்கடேச சர்மா

வடசொல் தமிழ் அகரவரிசை இது ஆகாசம், சலம், சந்தோஷம் முதலியவைபோல, வடமொழி எனப்படும் சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு வந்து தமிழ் எழுத்துக்களாலேயே எழுதப்பட்டுள்ள வடசொற்களுக்குத் தமிழ்ச் சொற்களால் பொருள் கூறும் அகராதியாகும். எனவே, மேலே கூறப்பட் டுள்ள சம்ஸ்கிருதத் தமிழ் அகராதிக்கும், இந்த வட சொல் தமிழ் அகரவரிசைக்கும் உள்ள வேறு பாட்டை யுணரவேண்டும்.

இவ்வகராதியின் ஆசிரியர் : தனித்தமிழ் வேந்த ராகிய மறைமலையடிகளின் மகளார் தி. நீலாம்பிகை யம்மையார். நூலின் பெயராக அகராதி என்று கூறா மல் 'அகரவரிசை என்று கூறியிருப்பதிலிருந்தே அம்மையாரின் தனித்தமிழ்ப் பற்று வெளிப்படுகிறது. 292 பக்கங்கள் கொண்ட இந்நூலில் 5000 வடசொற் கட்குமேல் பொருள் கூறப்பட்டுள்ளன.