பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

419

419

(Indexes of Words Quoted From Indo-European Lang uages) கொடுக்கப்பட்டிருப்பது, இவ்வகராதிக்கு மட்டு மன்றித் தமிழ் மொழிக்கும் மாபெருஞ் சிறப்பளிப்பதா யுள்ளது.

ஆம், தமிழுக்குச் சிறப்புதான் ! இவ்வகராதியின் ஆசிரியர் ஞானப்பிரகாச அடிகளார் தமது முன்னுரை யில் பின்வருங் கருத்துக்களை வெளியிட்டுள்ளார் : -

தமிழ்ச் சொற்கள் முதல் முதல் மக்களினத்தில் மொழி தோன்றத் தொடங்கிய காலத்தில் எழுந்த சொல்லொலிகளை அடிப்படையாகக் கொண்டவை தமிழ்ச் சொற்களால் உணர்த்தப்படுங் கருத்துக்கள், மக்களினத்தின் பொதுப் பண்பைக் குறிக்கும் அடிப் படையாகும்; எனவே, கூர்ந்து ஆராயின், தமிழ்ச் சொற்களின் வேரிலிருந்தே உலக மொழிகளின் சொற்கள் தோன்றிப் பல்வேறு வடிவங் கொண்டன என்பது புலப்படும்.

இக்கருத்துப்படத் துணிந்து எழுதியுள்ளார் அறிஞர் ஞானப்பிரகாசர். தமிழ்ச் சொற்களிலிருந்து தான் இந்திய மொழிச் சொற்கள் தோன்றின என்பது பரவலான பழங்கருத்து. ஆனால், ஐரோப்பிய மொழிச் சொற்களும் தமிழ்ச் சொற்களிலிருந்தே தோன்றின என்னும் மாபெருங் கருத்து, ஞானப்பிரகாசர் போன்ற ஒரு சிலரால் மட்டும் ஆராய்ந்து சொல்லப்பட்ட புது விருந்தாம் .

இனி, இவ்வகராதியின் சிறப்புக்கு எடுத்துக் காட்டாக, 'அகழ்தல்' என்னும் சொல்லுக்குக் கூறப் பட்டுள்ள விளக்கம் வருமாறு: