பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

425

425

செந்தமிழ் அகராதி (

தமிழுக்குத் தமிழான இவ்வகராதியின் ஆசிரியர் க.சி. கந்தையா பிள்ளை. ஆண்டு 1950.

திருக்குறள் அகர வரிசை

இது, திருக்குறள் முழுவதிலும் உள்ள பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச் சொல், உரிச் சொல், ஆகிய அனைத்துச் சொற்களும் அகர வரிசைப் படுத் தப்பட்ட அகராதியாகும். குறிப்பிட்ட ஒரு சொல் திருக்குறளில் என்ன பொருளில் - என்னென்ன பொரு ளில் எடுத்தாளப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள உதவும் நோக்கத்துடன் இஃது ஆக்கப் பட்டது. இதன் ஆசிரியர் புதுவை சுந்தர சண்முகனார்.

1950-ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் தொடங்கப்பட்டுத் தொடர்ந்து செய்யப்பட்டு வந்த இவ்வகராதி, சிறப்பான முறையில் திருக்குறள் சொல் லடைவு என்னும் படைப்பு சாமி. வேலாயுதம் பிள்ளை யவர்களால் வெளியிடப்பட்டு விட்டதால், ஆசிரியரால் சோர்ந்து கைவிடப்பட்டது. வெளிவராமல், கத்தை கத்தையாகக் கையெழுத்து வடிவில் உள்ள இவ்வக ராதியின் அலங்கோலத்தை' இன்றும் ஆசிரியரிடம் காணலாம்.

திருக்குறள் அகராதி (கந்தையா)

திருக்குறள் சொற்பொருள் விளக்க அகராதி யாகிய இது, ந. சி. கந்தையா பிள்ளையால் தொகுக்கப் பெற்று வெளிவந்துள்ளது.