பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430

430

மேற் கூறப்பட்டுள்ள தலைப்புக்களின் கீழ் ஆயிரக்கணக்கான செய்திகள் அகரவரிசையில் இதில் விளக்கப் பெற்றுள்ளன. விளக்கம் என்றால் ஒரு வரி யிலோ அல்லது சில வரிகளிலோ அன்று; மிகவும் நீள மும் அகலமுங் கொண்ட தாளில் - பத்தி பத்தியாக பக்கம் பக்கமாக - கட்டுரை வடிவில் விளக்கம் காணப் படுகிறது. சில தலைப்புக்களின் கீழ்க் கொடுக்கப்பட்ட டுள்ள செய்திகளைத் தனித்தனியாக அச்சிட்டால் ஒவ் வொன்றும் தனித்தனி நூலாகச் சிறந்து காட்சியளிக் கும். கலைக் களஞ்சியத்தின் இன்னுமொரு சிறப் பாவது : - பெரும்பாலார் பார்க்காத சில பொருள்களும், பார்க்க முடியாத சில பொருள்களும், எழுத்துக்களால் விளக்கிப் புரியவைக்க முடியாத சில பொருள்களும் பொருத்தமான படங்களின் துணைகொண்டு விளக்கப் பட்டுள்ளன. இத்தகு பயனுள்ள கலைக் களஞ்சியம் ஒன்பது தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுத் தனித் தனி யாக ஒன்பது பெரிய வெளியீடுகளாகப் பதிப்பிக்கப் பட்டுள்ளது. இனி இது தோன்றிய வரலாறு வரும் மாறு:

சென்னை மாநிலத்தின் முன்னாள் கல்வியமைச்சர் தி. சு. அவினாசிலிங்கம் செட்டியாரவர்களின் முயற்சி யால் 1947 - ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சிக் கழகம்' என ஒரு நிறுவனம் சென்னையில் தோன்றியது. அன்னா ரது விடா முயற்சியாலும் பலர் ஈந்த பொருளுதவியா லும் 1947 - அக்டோபர் - விசயதசமியன்று தமிழ் வளர்ச் சிக் கழகம் கலைக்களஞ்சிய வேலையைச் சென்னைப் பல் கலைக்கழகக் கட்டிடத்தில் தொடங்கியது. ஆசிரியர் குழுவின் தலைவராக (Chief Editor) ம. ப. பெரிய சாமித் தூரன் அமர்த்தப்பட்டார். பல் துறைக் கலைகளில்