பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432

432

பழநியப்பா பிரதர்சு நிறுவனத்தாரால் 1955 - இல் வெளி யிடப்பட்டது.

மாடர்ன் ஆங்கில - ஆங்கிலத் தமிழகராதி Modern Srimagal Pocket Dictionary (English - English - Tamil) எனப்படும் இவ்வகராதி ஆங்கிலத்துக்கு ஆங்கி லத்தாலும் தமிழாலும் பொருள் கூறுவதாகும். இதில் 20,000 சொற்கட்குமேல் பொருள் கூறப்பட்டுள்ளன. வெளியான ஆண்டு 1955.

தமிழ் இலக்கிய அகராதி (பாலூரார் ) இது, தமிழ் இலக்கியங்களின் சார்பாகவுள்ள பல் வகைப் பெயர்கள் அகரவரிசைப் படுத்தப்பட்டு விவ ரிக்கப்பட்டுள்ளது. இதில், சொல் அகராதி, தொகை யகராதி, பிரபந்த அகராதி, நூல் அகராதி, புலவர் அக ராதி, பிற்சேர்க்கை என்னும் பிரிவுகள் உள்ளன. அத திலும் அததைச் சார்ந்த பெயர்கள் விளக்கப்பட்ட டுள்ளன. பிற்சேர்க்கைப் பிரிவில் இக்காலப் பெரியோர் இடம் பெற்றுள்ளனர். இவ்வகராதி, ஒரு சொல் லுக்கு ஒரு சொல்லால் பொருள் கூறுவதன்று; பத்தி பத்தியாகப் பல வாக்கியங்களால் விளக்கம் தருவது.

இதன் ஆசிரியர் : வித்துவான், பாலூர். கண் ணப்ப முதலியாரவர்கள். வெளியீடு : சென்னை சென்ட் ரல் புக் டிப்போ . ஆண்டு 1957.

தமிழ்ப் புலவர் அகரவரிசை (கழகம்) இவ்வகராதியில், அகத்தியப்ப முதலியார் முதல் வைத்தியலிங்கப் பிள்ளையீறாக 1595 தமிழ்ப் புலவர்கள் அகரவரிசைப் படுத்தப்பட்டு விவரங் கொடுக்கப் பட்டுள்ளார்கள். இது மூன்று பாகங்களாகப் பிரித்து