பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436

436

இந்த அகராதியில் சொல் விளக்கம் செய்யப்பெற் றுள்ள பதினைந்து இந்தோ - ஆரியன் மொழிகளின் பெயர்கள் வருமாறு: 1. சமசுகிருதம் (Sanskrit) 9. குசராத்தி (Gujarati) 2. பாலி (Pali)

10. ஹல்பி (Halbi) 3. பிராகிருதம் (Prakrit) 11. கொங்காணி (Konkani) 4. நேபாளி (Napali) 12. குமாவோன் (Kumaon) 5: மராத்தி (Marathi) 13. ஒரியி (Oriya) 6. இந்தி (Hindi) 14. சிந்தி (Sindhi) 7. அஸ்ஸாமி (Assamese) 15. சிங்களம் (Singhalese) 8. வங்காளம் (Bengali)

இந்த அகராதியில் இடம் பெற்றுள்ள மற்ற மொழிகள் வருமாறு: 1. அரபு மொழி (Arabic) 4. கிரீக் (Greek) 2. பாரசீகம் (Persian) 5. இலத்தீன் (Latin) 3. பலுச்சி (Baluchi) 6. ஆங்கிலம் (English)

தமிழ்ச் சொற்களும், தமிழிலிருந்து பிரிந்த தென் னிந்திய மொழிச் சொற்களும், தமிழோடு தொடர் புடைய மற்ற மற்ற திராவிட மொழிச் சொற்களும், தமிழிலிருந்து சென்று கலந்த வடமொழிச் சொற்களும் வட இந்திய மொழிச் சொற்களும், சிங்களம், நேபாளம், அரபு, பாரசீகம் முதலிய ஆசிய மொழிச் சொற்களும், கிரீக், இலத்தீன், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிச் சொற்களும் இன்ன பிறவும் இடம் பெற்றுள்ள இந்த அகராதி உண்மையிலேயே ஓர் அரும் பெரும் படைப்பே யாகுமன்றோ?