பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

439

439

ஊடுருவி நிற்பதன்றி, வட இந்திய மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலுங்கூடச் சென்று கலந்துள் ளமை புலனாகுமே! இனி, அகராதியின் இறுதிச் சொல் லாக - அதாவது 4572- ஆம் சொல்லாக உள்ள

வையம்' என்னும் சொல்லின் பொருள் விளக்கம் வரும். மாறு:

Ta. Vaiyam earth; vaiy-akam id., world. Ma. vayyam, vaiyakam id.

மேலே , Ta.. என்பது Tamil - தமிழ்; Ma. என்பது, Malayalam = மலையாளம்.

மொத்தத்தில், இந்த அகராதியினால் தமிழ் மொழி யின் பரந்துபட்ட பான்மையும் ஆட்சியும் மாட்சியும். குன்றின் மேலிட்ட விளக்கென விளங்குவதால், இந்த அகராதியை ஆக்கிய பேராசிரியர்கள் இருவர்க்கும் தமிழ் மக்கள் மிகவும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டவராவர்.

ஆட்சிச் சொல்லகராதி glossary of Administrative Terms (English-Tamil). எனப்படும் இவ்வகராதியில் ஆங்கிலத்தில் உள்ள கலைச் சொற்கள் பலவற்றிற்கு நேரான தமிழ்ச் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சென்னை அரசினர் அச்சுக்கூடக் கண்காணிப்பாளரால் அச்சிடப்பட்ட இவ்வகராதி வெளியான ஆண்டு, நூலின் எந்த இடத், திலும் கண்களுக்குப் புலப்படவேயில்லை.

தமிழ் - இந்தி அகராதி ( தமிழ்ச் சொல்லுக்கு இந்திச் சொல்லால் பொருள் கூறுவது இந்த அகராதி. வெளியீடு: தட்சிண பாரத இந்தி பிரசார சபை. ஆண்டு : 1962.