பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

445

445

அமைத்துள்ளனர். அதாவது, ஒரு புலவரின் பாடல் களே பல நூற்களிலும் உள்ளனவாதலால், ஐந்நூறுக்கு மேற்பட்ட புலவர்களின் பெயர்களை அகர வரிசையில் அமைத்து, ஒவ்வொருவர் பெயரின் கீழும் அவரவர் பாடிய பாடல்களைப் பல நூற்களிலிருந்தும் கொண்டு வந்து நிரல் செய்துள்ளனர். குறிப்பிட்ட ஒரு புலவர் எந்தெந்த நூலில் என்னென்ன செய்யுள் பாடியுள்ளார் என்பதை யறிவிக்கும் இப்பதிப்பு, சங்கப்புலவர்களைப் பற்றி ஆராய்வோர்க்கு மிகவும் பயனளிக்க வல்லது. மற்றும், இலக்கியச் சொல் அகராதியும் புலவர் அகரா தியும் தயாரிப்போர்க்கும் இந்த சமாசப் பதிப்பு பெருந் துணையன்றோ !

இப்படியாக இலக்கியச் சார்பான அகராதி துறையில் இன்னுஞ் சிலர் வேரை செய்துள்ளனர். கேரளப் பல்கலைக் கழகம் புறநானூற்று அகராதி தயா ரித்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆசிரியர் ஆர். பிச்சைக்கண்ணன் குமரகுருபரர் நூற்கட்கு அக ராதி ஆக்கியுள்ளார். சென்னை 'மர்ரே கம்பெனி பொறுப்பில் எஸ். இராசம் என்பவர் 'பாட்டும் தொகை யும்' என ஒன்று படைத்துள்ளார். மற்றும், அண்ணா மலைப் பல்கலைக் கழக ஆசிரியர் ச. தண்டபாணி தேசிக ரவர்கள் எட்டுத் தொகை பத்துப்பாட்டு இலக்கியங்

கட்கு அருஞ்சொல் அகரவரிசை ஆக்குவதாகத் தெரிவு கிறது. இஃதன்றியும், புதுச்சேரியில் பாரிஸ் அரசின் ரால் நடத்தப்படும் பிரெஞ்சு கல்வி கலைக் கழகத்தாரும் (French Institute) பிரெஞ்சு மொழியோடு பிணைத்துச் சங்க இலக்கிய அகராதியொன்று படைத்து வருவதா கத் தெரிகிறது. இவர்களே, பிரெஞ்சு மொழியொடு பிணைந்த தொகையகராதி யொன்றும் தொடங்கிச் செய்து வருவதாகத் தோன்றுகிறது.