பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

447

ஐந்தாம் பாகம்


சொல்லும் மொழியும்

சொல் பிறந்த கதை

சொற்களின் சேர்க்கையே மொழி (பாஷை). மொழி பேசும்போது பல சொற்களைத் தொடர்ந்து ஒலிக்கி றோம். சொற்களின் தொடர்ச்சியைச் சொற்றொடர் அல்லது வாக்கியம் என்கிறோம். மொழி பேசும்போதும் எழுதும்போதும் பல வாக்கியங்கள் இடம் பெறுகின் றன.

காரண காரிய முறைப்படி (Logical Method) எழுத் துக்களால் ஆனது சொல் - சொற்களால் ஆனது வாக் கியம் - வாக்கியங்களால் ஆனது மொழி - என்றாலும், மொழியில் முதலில் எழுத்துக்களும் அடுத்துச் சொற் களும், பின்னர் வாக்கியங்களும் தோன்றவில்லை; முத லில் வாக்கியங்களும் பின்பு சொற்களும் பின்னரே எழுத்துக்களும் தோன்றின. உளவியல் (Psychological