பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

453

453

ஒவ்வொரு செயலையும் ஒவ்வொரு சொல்லால் குறித் தார்கள்; இப்படியாகப் பொருள்கட்கும் செயல்கட்கும் பெயர் வைத்த பின்னரே, பல சொற்களைச் சேர்த்து வாக்கியமாகப் பேசிக் கருத்தைத் தெரிவித்துக் கொண் டார்கள். தனித் தனிக் கற்கள் இல்லாமல் கட்டடம் கட்ட முடியாதது போலவே, தனித் தனிச் சொற்கள் இல்லாமல் வாக்கியம் அமைக்க முடியாதல்லவா? எனவே, கட்டடத்திற்கு முந்தியது கல்லே என்பது போல, சொற்றொடருக்கு முந்தியது சொல்லே என்பது புலனாகும்.

மேலுள்ளவாறு சிலர் கூறக்கூடும். இதிலும் ஓரளவு உண்மையிருக்கிற தென்றாலும், இவ்வுண்மை தொடக்க நிலைக்கு முற்றிலும் பொருந்தாது ; தொடக்க நிலைக்கு அடுத்தடுத்த நிலைகளிலேயே இவ்வுண்மை ஓரளவு பொருந்தும். இக்கருத்தைத் தெளிவு செய்யச் சிறிது விளக்கம் தேவை :

மாந்தர் தனித் தனிக் கற்களை யடுக்கி வீடு கட்டு வது உண்மைதான்! வீட்டிற்கு முந்தியது கல்லே என் பதும் உண்மைதான்! ஆனால் இந்தக் காலத்தில் உள் ளதுபோல் அந்தக் காலத்தில் சுடுமண் (செங்கல்) கற் களோ, கருஞ்சுதை மண் (சிமட்டி) கற்களோ இருக்க வில்லை. மலைக் குகைகளில் வாழ்ந்து பழகியவர் மரபில் வந்த மக்கள், மொத்தமான மலையிலிருந்தே தனித் தனியாகக் கருங்கல் கட்டிகளை வெட்டியெடுத்துப் பின் னர் அவற்றைச் சேர்த்துக் கல்வீடு கட்டினார்கள். இந் தக் காலத்திலுங்கூட, மலைப் பாங்கிலுள்ள ஊர்களில் மதில்கள் கருங்கல் துண்டுகளால் எழுப்பப்பட்டிருப்ப தைக் காணலாம். எனவே, தனித் தனிக் கருங்கல் துண்டுகள் எனப்படுபவை, மொத்தமான ஒரு தொகுப்