பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454

454

பிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவையே என்பது புல னாகும். ஒரு (மலைத்) தொகுப்பிலிருந்து பிரித்தெடுக்கப் பட்ட தனித் தனிக் கருங்கல் துண்டங்களைக் கண்ட மக்கள், பின்னர் அவை போலவே செயற்கைக் கற் களைச் செய்யத் தொடங்கினர். செயற்கைக் கற்களுங் கூட மொத்தத் தொகுப்பிலிருந்து பிரித்தெடுக்கப்பட் டவையே! நிலத்திலிருந்து மண்ணைத் தோண்டி யெடுத்துப் பிசைந்து தனித் தனியாக அறுத்துச் சூளை யில் இடப்பட்டவையே செங்கற்கள். சொல்லின் கதை யும் இதுவேதான் !

ஊமையர் கைக் குறிப்புடன் ஏதேதோ ஒலிகளை யெழுப்பிக் கருத்தறிவிக்க முயல்வது போலவே, முதற் காலத்து மாந்தரும் கைக் குறிப்புடன் ஏதேதோ கூக்குர லிட்டே கருத்தை அறிவித்துக்கொண்டனர். அவர்கள் எந்தப் பொருளைக் காட்டி என்ன ஒலி எழுப்பினார் களோ அந்த ஒலி அப்பொருளின் பெயராயிற்று; அந்த ஒலிப் பகுதி பிற்காலத்தில் இலக்கணத்தில் 'பெயர்ச் சொல்' எனப்பட்டது. மற்றும், அவர்கள் எந்தச் செய் லைக் (வினையைக்) குறிக்க என்ன ஒலி எழுப்பினார்களோ அந்த ஒலி அச்செயலின் (வினையின்) பெயராயிற்று; அந்த ஒலிப் பகுதி பிற்கால இலக்கணத்தில் 'வினைச் சொல்' எனப்பட்டது. பெயர்ச் சொற்களும் வினைச் சொற்களும் இப்படி ஏற்பட்டனவே.

தமிழிலக்கணத்தில் பெயர்ச்சொல், வினைச்சொல் ' இடைச்சொல், உரிச்சொல் எனச் சொற்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்நான்கனுள் பெயர்ச் சொற்களும் வினைச் சொற்களுமே முந்தி யவை; இடைச் சொற்களும் உரிச் சொற்களும் பிந்திய வையே. முந்திய பெயர்ச் சொற்கள், வினைச் சொற்கள்