பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456

456

பெயர்களைத்தான் சுட்டியிருப்பர்; அவர் தம் பேச்சு பொருட்களைப் பற்றியதாகத்தான் முதலில் இருந்திருக்க முடியும்; பின்னரே அவர்கள் பலவிதமான செயல்களில் (வினைகளில்) கருத்துச் செலுத்தியிருப்பர்; அப்போது பலவித வினைச்சொற்கள் தோன்றியிருக்கும். இப்போ தும், முதல் முதலாக மொழி பேசத் தொடங்கும் பச் சிளங் குழந்தைகளின் பேச்சைக் கூர்ந்து நோக்கின், முத லில் அவர்தம் வாயிலிருந்து பொருட்களின் பெயர்கள் வெளிப்படுதலையே காண முடியும்; பின்னரே அவர்கள் வினைச் சொற்களை யறிந்து பேசுகின்றனர். எடுத் துக் காட்டாக, - அம்மா, அப்பா, பாச்சி (பால்), சோச்சி (சோறு), தண்ணி (தண்ணீர்), மம்மு, (தின்பண்டம்) முதலிய பெயர்ச் சொற்களைத்தான் குழந்தைகள் முத லில் கூற அறிவார்களே தவிர, ஆடுதல், ஓடுதல், தாண்டுதல், குதித்தல், பேசுதல், பாடுதல் முதலிய வினைச் சொற்களை முதலில் அறியமாட்டார்கள். எனவே, பெயர்ச்சொல்லுக்குப் பின்னரே வினைச் சொல் என்பது பெறப்படும்.

அடுத்து, இடைச்சொல் எனப்படுவது, தனித்துப் பொருள் தரும் ஒரு வகைச் சொல்லன்று; பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் இணைத்துப் பேசும்போது தானாக ஓடி வரும் ஒரு வகை ஒலியமைப்பே இடைச்சொல் எனப்படுவது. எடுத்துக் காட்டு வருமாறு :- மரம் என்பது ஒரு பெயர்ச் சொல் ; குதித்தல் (குதி) என்பது ஒரு வினைச்சொல்; 'மரத்தின் லிருந்து குதித்தான்' என்னும் தொடரில், மரம் என்னும் பெயர்ச் சொல்லின் பின்னே அத்து, இல், இருந்து என் னும் இடைச் சொற்களும், குதி என்னும் வினைச் சொல்லைத் தொடர்ந்து த், த், ஆன் என்னும் இடைச் சொற்களும் இயற்கையாக வந்து கருத்தைத் தெளி