பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460

460

இப்போது இவ்விடத்தில் சிலர் இன்னொரு சிக்கலைக் கிளப்பக்கூடும். அதாவது, - மொழியிலுள்ள பெயர்கள் ளெல்லாம் காரணப் பெயர்களே ; ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு காரணங் கருதியே நம் முன்னோர் பெயர் வைத்துள்ளனர் ; பறப்பதால் பறவை என்றும், நா (நாக்கு) நீளமாகத் தொங்குவதால் நாய் என்றும், அகழப்பட்டதால் (தோண்டப்பட்டதால்) அகழி என்றும், இப்படியே ஒவ்வொரு காரணங் கருதிப் பெயர்கள் வைக்கப்பட்டன. சில பெயர்கட்குக் காரணம் தெரியவில்லையே யெனின், அவற்றிற்கும் ஏதேதோ காரணங் கருதியே பெயர்கள் வைக்கப் பட்டன; அக்காரணங்கள் நாளடைவில் புலப்படாமல் போனதால் அப்பெயர்களை இடுகுறிப் பெயர்கள்' என இலக்கணத்தில் கூறுகின்றனர்.- எனச் சிலர் வரிந்து கட்டிக்கொண்டு பேசுகின்றனர். சிலர் இந்தக் கருத்தை நம்பிக்கொண்டு பின்வருமாறு கூறக்

கூடும் :

"பெயர்கள் எல்லாம் காரணங் கருதியே ஏற்படுத்தப் பட்டவை யென்றால், முதற்கால மக்கள் முதலில் ஒவ்வொரு பொருளுக்கும் தக்க காரணங் கருதி ஒவ்வொரு சொல்லைப் பெயராக வைத்த பின்னரே, அப்படி வைக்கப்பட்ட சொற்களை இணைத்துச் சொற்றொடராகப் (வாக்கியமாகப்) பேசியிருப்பர்; எனவே, சொற்றொடருக்கு முந்தியது சொல் - அதாவது - தனித்தனிச் சொற்கள் தோன்றிய பிறகே வாக்கியம் தோன்றியது. எனவே, வாக்கியமாகிய மொத்த ஒலித் தொகுப்பிலிருந்தே பின்னர்த் தனித்தனியாகச் சொற்கள் பிரித் தெடுக்கப்பட்டன என்னும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலுள்ளவாறுஞ் சிலர் கூறலா மன்றோ ? இக் கருத்துக்கு மறுப்பு வருமாறு: