பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

461

461

(1) 'எல்லாப் பெயர்களும் காரணப் பெயர்களே ! என்று சிலர் கூறுங் கருத்து பொருந்தாது. முதற் காலத்தில் பெயர்கள் இடுகுறியாகவே ஏற்பட்டன. காரணப் பெயர்கள் என்று சொல்லப்படுவனவற்றின் அடிப்படைகளை (மூலங்களை) ஆராயின் அவையும் இடு குறியே என்பது புலனாகும். எடுத்துக் காட்டாக, -

பறப்பதால் பறவை என்ற பெயர் வந்தது என்றால், பறக்கும் செயலுக்குப் பறத்தல் என்னும் பெயர் ஏன் வைக்கப்பட்டது ? கொறத்தல் என்று வைத்தால் என்ன? இது போலவே, நா (நாக்கு) வெளியில் தொங் குவதைப் பார்த்து நாய் என அழைத்தார்களென்றால், நாக்குக்கு 'நா' என்னும் பெயர் ஏன் வைக்கப்பட்டது ? 'கோ' என அழைத்தால் என்ன? இவை போலவே, அகழ்வதால் (தோண்டுவதால் ) அகழி என்னும் பெயர் வைக்கப்பட்டதென்றால், அகழும் செயலுக்கு அகழ்தல் என்னும் பெயர் ஏன் வைக்கப்பட்டது? குகழ்தல் என்று சொன்னால் என்ன?

எனவே, பறவை, நாய், அகழி என்னும் காரணப் பெயர்களின் அடிப்படைகளாகிய பறத்தல், நா, அகழ் தல் என்னும் பெயர்கள் காரணம் இல்லாத இடுகுறிப் பெயர்களே.

(2) ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு மொழியில் லும் ஒவ்வொரு பெயர் இருப்பதைக் கூர்ந்து நோக்க வேண்டும். நாய் என்னும் தமிழ்ப் பெயருக்கு நேராக வடமொழியில் குக்குரக' என்றும், இந்தியில் குத்தா' என்றும், ஆங்கிலத்தில் டாக்' (Dog) என்றும், பிரெஞ் சில் 'ஷியான்' (Chien) என்றும், இலத்தீன் மொழியில் கனிஸ்' (Canis) என்றும் பெயர்கள் உள்ளமை