பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470

470

குறித்த பல சொல், பல பொருள் குறித்த ஒரு சொல் என நாம் முன்பு நிகண்டுகளிற்கண்ட இரு பிரிவுகளும் இந்தத் திரி சொல்லின் வகைகளாகும்.

ஒரு பொருள் குறித்த வேறு சொல் லாகியும் வேறு பொருள் குறித்த ஒரு சொல் லாகியும்

இருபாற் றென்ப திரிசொல் கிளவி என்பது தொல்காப்பிய நூற்பா.

ஒரு பொருள் குறித்த பலசொல் லாகியும் பலபொருள் குறித்த ஒரு சொல் லாகியும்

அரிதுணர் பொருளன திரிசொல் லாகும் என்பது நன்னூல் நூற்பா.

செந்தமிழ் பேசப்படும் பன்னிரண்டு நாடுகளிலும் (பகுதிகளிலும்) வழங்கும் பொதுச் சொற்களாய் இல்லா மல், அந்தந்த நாட்டில் (பகுதியில் மட்டும் வழங்கும் வட்டார வழக்குச் சொற்கள் திசைச் சொற்கள் எனப் படும் - இது தொல்காப்பியர் கருத்து.

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி.

என்பது தொல்காப்பிய நூற்பா. இதிலிருந்து, தொல் காப்பியர் காலத்தில் தமிழ் பேசும் மாநிலம் பன்

னிரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டுப் பன்னிரண்டு அரசுகளாக ஆளப்பட்டமை புலனாகும். வட்டார வழக்குச் சொற்கள் எல்லா இடத்துக்கும் பொதுவா யின்றி ஒவ்வொரு திசையில் (மூலையில்) மட்டும் வழங்குவதால் திசைச்சொற்கள் எனப்பட்டன.

மூவாயிரம் ஆண்டுக்கு முன் தொல்காப்பியர் திசைச் சொல் என்பதற்கு இவ்வாறு விளக்கம் தந்தார்.