பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

477

477

வழியில் இயங்குவதால் 'இயவை' என்ற பெயரும், நடப்பதால் 'நடவை' என்ற பெயரும், செல்வ தால் 'செலவு' என்ற பெயரும், ஒழு கு வ தால் (தொடர்ந்து செல்வதால்) 'ஒழுக்கம்' என்ற பெயரும், வழி செப்பம் செய்யப்பட்ட தாதலால் 'செப்பம்' என்ற பெயரும் - ஆக இப்படிப் பல பெயர்கள் வழி என்னும் ஒரு பொருளைக் குறிக்க உள்ளன. இவை வினையடியா கப் பெற்ற பெயர்களாம்.

(5) ஒரு பொருளே தன் உறுப்புக்கள் தொடர் பாகப் பல பெயர்கள் பெறுவதும் உண்டு. எடுத்துக் காட்டாக, - யானை என்னும் ஒரு பொருளுக்கே, புள்ளி பொருந்திய முகம் இருப்பதால் 'புகர் முகம்' என்னும் பெயரும், கருநிறம் உடைமையால் 'கரி' என்னும் பெயரும், தொங்குகிற வாய் உடைமையால் நால் வாய் ' என்னும் பெயரும், தந்தம் உடைமையால் தந்தி' என்னும் பெயரும், உரல் (கறை) போன்ற கால் (அடி) உடைமை யால் 'கறையடி' என்ற பெயரும் துதிக்கையுடைய விலங்காதலால் 'கைம்மா' என்ற பெயரும், துளை (புழையுடைய கை உடைமையால் புழைக்கை' என்ற பெயரும் உள்ளன.

(6) ஒரு பொருளே தன் செயல் - தன்மை -பண் பினால் பல பெயர்கள் பெறுவதும் உண்டு. எடுத்துக் காட்டாக, - ஞாயிறு (சூரியன்) என்னும் ஒரு பொருளுக்கே, வெப்பமும் வெளிச்சமும் உள்ளதால் வெய்யோன், சுடர், சுடரவன், எல்லை , கதிர், கதிரவன் செங்கதிர் , செஞ்சுடர், வெங்கதிர், வெஞ்சுடர், ஆயிரங் கதிரோன் , அழல்வன், என்றூழ், கனலி முதலிய பெயர்களும், இருளை ஓட்டுவதால் இருள் வலி என்ற