பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

483

483

இம்மரபுகளைச் சேர்ந்த பலரையும் இச் சொற்களால் உலகம் அழைக்கின்றதன்றோ? கென்னடி, மாக்மில்லன் முதலிய பெயர்களும் இவ்வாறே பலரை அழைக்கப் பயன்படுகின்றன.

அவ்வளவு ஏன்? நடந்த நிகழ்ச்சியொன்று வருமாறு:- தமிழ் நாட்டில் ஒரு சிற்றூரில் ஒரு குடும் பத்தில் விநாயகம், முத்தையன் எனப் பிள்ளைகள் இருவர் உள்ளனர். தெருவினர் மூத்தவனை விநாயகம் - விநாயகம் என்று அழைத்து வந்தனர். பின்னர், அடுத்துப் பிறந்த முத்தையனைச் சின்ன விநாயகம் என்று அழைத்து வரலாயினர். தம்பிக்கு முத்தையன் என்ற தனிப் பெயர் இருக்கவும், அண்ணன் பெயராகிய விநாயகம் என்ற பெயரால் அவனும் அழைக்கப்படு கிறான். தந்தைக்கு 'காபா' என்ற தனிப் பெயரும், மைந்தனுக்கு 'கரம் சந்த்' என்ற தனிப் பெயரும் இருந்துங்கூட, இருவரும் 'காந்தி' என்னும் ஒரே பெயரால் அழைக்கப்பட்டனர். தந்தைக்கு 'மோதிலால் ' என்ற தனிப் பெயரும், மைந்தனுக்கு 'சவகர்லால் ' என்ற தனிப் பெயரும் இருந்துங்கூட, இருவரும் நேரு என்னும் ஒரே பெயரால் சுட்டப்பட்டனர். குடும்பத்தில் பிறந்த தொடர்பு என்றென்ன! - சவகர்லால் நேருவிற்கு வாழ்க்கைப்பட்ட தொடர்புடைய கமலாவும் 'கமலா நேரு ' என அழைக்கப்பட வில்லையா?

மேற் குறிப்பிடப்பட்டுள்ளவர்கட்கெல்லாம் தனித்தனிப் பெயர்கள் இல்லை; அக் குடும்பங்களில் பெயர் ஏழ்மை இருக்கிறது - என்று எவரேனும் சொல்ல முடியுமா? ஒரு சொல் பல் பொருள் நிலையும் இது போன்றதே! ஏதேனும் ஒரு விதத் தொடர்பு பற்றிப் பல பொருட்களை ஒரே சொல்லால் மக்கள் அழைப்பது