பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486

486

வுப் பொருளைக் குறிப்பது தொழிலாகு பெயர். 'காளை வந்தான்' என்ற தொடரில் காளை என்னும் ஆண் மாட்டின் பெயர், துணிவிலும் வன்மையிலும் காளை யுடன் ஒப்புமை (உவமையுடைய வீரனைக் குறிப்பது உவமையாகு பெயராகும்.

இலக்கண ஆசிரியர்கள் கூறியுள்ள ஒருவகை ஆகுபெயர் அமைப்பின் நுட்பத்தையும் இங்கே குறிப் பிடுதல் நன்று : அதாவது, - கருமை என்னும் பொரு ளுக்கு உரிய கார் என்னும் சொல், கருநிறம் உடைய மேகத்திற்கு ஆகி வருவது ஒரு மடி ஆகு பெயராம் ; மேகம் மழை பெய்யும் கார் காலத்திற்கு ஆகிவருவது இருமடி ஆகு பெயராம் ; கார் காலத்தில் விளையும் கார் நெல்லுக்கு ஆகிவருவது மும்மடியாகு பெயராம் ; இப் போது கார் சாப்பிட்டு வருகிறோம் என்ற விடத்தில், கார் நெல்லைக் கொண்டு ஆக்கிய சோற்றுக்கு ஆகி வருவது நான் மடியாகு பெயராம். இவ்வாறே, கோடு என்னும் பொருளுடைய வரை என்னும் சொல், கணு வைக் குறிப்பது ஒரு மடியாகு பெயர் ; கணுக்களுடைய மூங்கிலைக் குறிப்பது இருமடியாகுபெயர் ; மூங்கில் வளரும் மலையைக் குறிப்பது மும்மடியாகு பெயர். இவை போல இன்னும் பலமடி யாகு பெயர்கள் பல உள்ளன.

இவ்வாறே எல்லா ஆகு பெயர்களையும் ஆராயின், ஒரு சொல் பல பொருள்கள் தோன்றியதற்கு, மக்க ளின் மொழிச் சொட்டும் ஒரு பொருட்டாகும் என்னும் கருத்து புலனாகாமற்போகாது.

(2) ஒரு சொல் பல பொருட்கள் தோன்றியதற்கு இன்னொரு இயற்கைப் பொருட்டும் கூறலாம். அதா வது - ஒரே சொல்லால் பல பொருள்களை அழைப்பது