பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

493

493

சமையலுக்கு முன் கொலை நிகழ்வதாலும் கொலையின்றிப் பெரும்பாலும் உலகில் சமையல் இல்லையாதலாலும் கொல்லுதல் என்னும் பொருளும் சமையல் என்னும் பொருளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என் னும் கருத்தும் முன்னோரிடத்தில் விரிவாக விளக்கப் பட்டுள்ளன. மேலோடு பார்க்குங்கால், கொல்லுதல் தொழில் வேறு, சமைத்தல் தொழில் வேறு என்றுதான் தோன்றும். ஆழ்ந்து பார்த்தால்தான், கொலையே தான் சமையல் - கொலை வேறில்லை , சமையல் வேறில்லை என்பது புலப்படும். அதாவது, மிகப் பழங் காலத்தில், அஃறிணை உயிர்களே யன்றி, உயர்திணை யாகிய மக்களுங்கூட, உயிர்களைக் கொன்று சமைக் காமல் பச்சையாகவே தின்றார்கள் ஆதலின், அந்தக் காலத்தில், கொன்றுவிட்டால் சமையல் முடிந்துவிட்ட தாகவே பொருள் ; உடனே உண்ண வேண்டியது தான். நாளடைவில் மக்கள் பச்சையாகவே உண்ணா மல் சமைக்கவும் தொடங்கினர். அதன் பின்னர்தான், கொல்லுதல் எனும் தொழிலைக் குறிக்கப் பயன்படுத்திய அடுதல் என்னும் சொல்லை , சமைத்தல் என்னும் தொழில் லைக் குறிக்கவும் பயன்படுத்தினர். அந்த அடுதல்) வேர்ச்சொல்லிலிருந்து அடுப்பு, அடுக்களை, அடை, அடிசில் முதலிய சொற்களெல்லாம் உருவெடுத்தன. இவ்வளவு நுட்பங்களையும் உணராமற்போனால், கொல் லுதல், சமைத்தல் என்னும் இரு சொற்களும் வேறினம் தழுவியவை என்றுதானே கூறத் தோன்றும்! உண் மையில் இவையிரண்டும் ஓரினம் தழுவியவையே யன்றோ ! இவ்வாறு நுணுகி யாராயின், ஒரு சொல் பல் பொருள்களுள் பெரும்பாலானவை ஓரினம் தழுவி யவையே என்பதும் சிறுபான்மையினவே வேறினர் தழுவியவை என்பதும் புலப்படும்.