பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

495

495

என்ன பொருட்டினால் ஒவ்வொரு பகுதியினரும் அந்தந்தப் பொருளை அரி என்னும் சொல்லால் அழைத் தார்கள் என்று எவரும் பொருட்டு கேட்க முடியாது. “ எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்னும் தொல்காப்பியத்தின்படி, ஒவ்வொரு சொல்லும் ஏதேனும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கத்தான் செய் யும். ஆனால், அந்தப் பொருளைக் குறிக்க அந்தச் சொல் ஏன் ஏற்பட்டது என யாரும் திட்டவட்டமாகப் பொருட்டு கூற முடியாது. ஆழ்ந்து நோக்கின் எல் லாச் சொற்களுமே இடுகுறிச் சொற்களே; ஒரு சொல் என்பது ஒரு பொருளைக் குறிக்க ஏற்பட்ட ஒரு வகை அடையாளமே - என்னும் கருத்து முன்பே ஓரிடத்தில் ஆராய்ந்து நிறுவப்பட்டுள்ளது. மொழிப் பொருள் காரணம் விழிப்பத்தோன்றா' என்று தொல்காப்பியரே கூறியுள்ளா ரன்றோ? எனவே, தற்செயலாய் ஒரே ஒலியால் (ஒரே சொல்லால்) பல பகுதியினர் பல பொருள்களை அழைத்திருக்கக்கூடும். நாளடைவில் அவையெல்லாம் ஒன்றுதிரட்டப்பட்டு ஒரு சொல் பல் பொருள்கள்' என்ற பட்டம் பெற்றுவிட்டன. இக் கருத்தை நம்பச் செய்வதற்கு ஒரு சான்று வருமாறு:

ஒரு பள்ளிக்கூடத்திலுள்ள ஆறாம் வகுப்பில் ஆறு ஆறு முகங்களும், ஏழாம் வகுப்பில் ஏழு ஏழுமலை களும் படிப்பதாக வைத்துக்கொள்வோம். உண்மை யில் ஓர் ஆறுமுகத்துக்காவது ஆறு முகங்கள் இருக்கா ; ஒரு முகமே இருக்கும். அதே போல் ஓர் ஏழுமலையினிடமாவது ஏழுமலைகள் இருக்கா - ஏன் - ஒரு மலைகூட இருக்காது. இருப்பினும் இப்பெயர்கள் அந் தந்த மாணாக்கரை அழைப்பதற்காக இடப்பட்ட ஒரு வகை அடையாள ஒலிகளாகும். ஒரே ஆறுமுகம்