பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

47



தொல்காப்பியம்

இந்நூலில், சொற் பொருள் கூறும் துறையில் முதல் நூலாகிய தொல்காப்பியம் முதல் இன்று தோன்றிய அகராதிவரை ஆராய வேண்டும். அவ்வரிசைப்படி முதல்நூலாகிய தொல்காப்பியங் குறித்து இப்பகுதியில் சிறிது ஆய்வாம்:—

தொல்காப்பியம் ஒரு மொழியிலக்கண நூல். தொல்காப்பியர் என்னும் தமிழ்ப் பெரும் புலவரால் இயற்றப்பட்டதால் தொல்காப்பியம் என இஃது அழைக்கப்படுகிறது.

ஆசிரியர் வரலாறு

ஆசிரியர் தொல்காப்பியரின் வரலாறு பற்றி உறுதியாக ஒன்றும் வரையறுத்துக் கூறவியலாது. திருவள்ளுவர், ஒளவையார் முதலியோரின் பிறப்பு வளர்ப்பு குறித்து என்னென்னவோ கதைகள் நடமாடுவது போன்றே தொல்காப்பியர் பற்றியும் கதைகள் பல வழங்குகின்றன. இவர் குடிப்பெயர் ‘காப்பியம்’ என்பதாம்; பழம்பெருங் காப்பியக் குடியில் தோன்றியதால், குடிப்பெயராலேயே இவர் தொல்காப்பியர் என அழைக்கப்பட்டாராம்.

அகத்தியரின் மாணாக்கர் பன்னிருவருள் தொல்காப்பியர் தலைமாணாக்கராம். அதங்கோட்டாசான், செம்பூட்சேய், வாய்ப்பியனார், பனம்பாரனார், அவிநயனார், காக்கைப்பாடினியார், நற்றத்தனார் முதலியோர் தொல்-