பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512

512

எனவே, இக்காலக் கல்விக் கூடங்களில் அகராதி யைப் பயன்படுத்தவேண்டும் என்று அறிவுறுத்துவது போலவே, ஓரளவேனும் நிகண்டுப் பகுதிகளையும் அறிமுகஞ் செய்து வைப்பது நல்லது. இன்னும் கேட் டால் இக்காலத்தில் நம் நாட்டைப் பொறுத்தவரையும் அகராதியே சரிவரப் பயன்படுத்தப் படுவதாகத் தெரியவில்லை. ஆனால் அக்காலத்தில் நம் நாட்டில் நிகண்டுகள் நிரம்பப் பயன்படுத்தப்பட்டன. இக்காலத் தில் மாணாக்கர் பெரும்பாலாரிடத்தில் அகராதியே இருப்பதில்லை. அப்படியே அகராதி தரினும், அதில் உரிய சொற்பொருள் தேடிக் கண்டுபிடித்துப் பயன் படுத்தும் முறை பலருக்குத் தெரிவதில்லை. சிலர் அகராதியையே பார்த்ததில்லை. அகராதியைப் பற்றிக் கேள்விப்படாமலுங்கூட ஒரு சிலர் இருப்பினும் வியப் படைவதற்கில்லை. இந்த இரங்கத்தக்க எளிய நிலை, இற்றைக்கு ஐம்பது அறுபது ஆண்டுகட்கு முன்பு வரையுங்கூடத் தமிழகத்தில் இருந்ததில்லை. நமக்கும் முன் தலைமுறையினருக்கு ஏதேனும் ஒரு நிகண்டின் ஒரு சில பகுதிகளாயினும் கல்விக் கூடங்களில் கற்றுக் கொடுக்கப்பட்டன. இத்திட்டத்தை இக்காலத்திலும் கல்வித் துறையில் மீண்டும் படிப்படியாகக் கொண்டு வருவது நல்லது. அதற்குரிய வழி வருமாறு:

இக்காலக் கல்விக்கூடங்களில், மொழிப் பாடம் என்னும் பெயரில், கேட்டல் (Listening), பேசுதல் (Speaking), படித்தல் (Reading), பார்த்து எழுதுதல் (Transcription), அச்சு எழுதுதல் (Copy writing), சொற் றொடராக்கம், சொல்வது எழுதுதல் (Dictation), கடிதம் எழுதுதல் (Letter writing), கட்டுரை (Composition) எழுதுதல், செய்யுள் (Poetry), உரைநடை (Prose),