பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

513

513

இலக்கணம் (Grammar), பாட்டு (Song) , கதை, நாடகம், மொழி பெயர்ப்பு முதலிய பல்வேறு பிரிவுகள் பல்வேறு வேளைகளில் (Periods) பயிற்றப்படுகின்றன. இவற் றுடன், 'பத்தோடு பதினொன்று - அத்தோடு இது ஒன்று' என்ற முறையில் நிகண்டுப் பாடத்தையும் ஒரு பிரிவாகச் சேர்த்துக் கொள்ளலாமே! அதாவது, சூடா மணி நிகண்டு அல்லது வேறு ஏதாவது ஒரு நிகண் டைத் தேர்ந்தெடுத்து அதைப் பல கூறுகளாகப் பகுத் துக்கொண்டு வகுப்பு வாரியாகப் படிப்படியாகப் பயிற்றிவாலாமே!

இங்கே, காட்டாகத் திருக்குறளை எடுத்துக் கொள் வோம். ஐந்தாம் வகுப்பிற்கு இத்தனை குறள்கள் - இன்னின்ன குறள்கள்; ஆறாம் வகுப்பிற்கு இத்தனை குறள்கள் - இன்னின்ன குறள்கள் ; இப்படியே இன்னும் அடுத்த வகுப்புகட்கு உரிய குறள்கள் என்று பாடத் திட்டம் வகுத்துப் பயிற்றுவதைப்போல, ஒரு நிகண் டையும் பல கூறுகளாகப் பங்கிட்டுக் கொண்டு மூன்றாம் வகுப்பிலிருந்து கற்பித்து வரலாம். மூன்றாம் வகுப்பிலிருந்து தொடங்குவது குறித்துக் கருத்து வேற்றுமை தோன்றுமாயின், ஐந்தாம் வகுப்பிலிருந்து கட்டாயம் தொடங்கலாம். நிகண்டின் பன்னிரண்டு தொகுதிகளில் பிற தொகுதிகளை விட்டுவிட்டு, சொற் பொருள் கூறும் பதினோராவது தொகுதியை மட்டு மாயினும் தொடங்கிக் கற்பித்து வரலாம்.


கல்வித்துறை யறிஞர்கள் இத்துறையில் கருத்து செலுத்தியருளுவாராக!