பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514

பிற்சேர்க்கை - 1

சில நாட்கள் எனக்கும் இம்மன்

514

இதுகாறும் இந்நூலில் பேசப்பட்டுள்ள நிகண்டு நூற்களின் பெயர்கள், அவற்றின் ஆசிரியர் பெயர்கள், அவர்கள் வாழ்ந்த அல்லது நூல் இயற்றிய காலம், நூலின் பொருள் வகை ஆகிய விவரங்கள், பின்வரும் அட்டவணையில் நூற்றாண்டு வாரியாகச் சுருங்கத் தரப்பட்டுள்ளன. இனம் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலுங்கூடச் சேர்க்கப்பட்டுள்ளன. சில நூல்களைப் பற்றி அறிய முடியாத சில விவரங்கள் வெற்றுக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. நூலின் பொருள் வகை என்ற கட்டத்தில் 1, 2, 3 என எண்கள் இடப்பட்டிருக்கும். இம்மூன்றனுள் 1 என்பது, நிகண்டு நூற்களின் முப்பெரும் பிரிவுகளுள் முதல் பிரிவாகிய 'ஒரு பொருள் பல் பெயர்த் தொகுதி' என்னும் வகையைக் குறிக்கும் ; 2 என்பது, இரண்டாம் பிரிவாகிய 'ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி' என்னும் வகையைக் குறிக்கும் ; 3 என்பது, மூன்றாம் பிரிவாகிய 'பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி' என்னும் வகையைக் குறிக்கும். இவை முன்னர் நன்கு விளக்கப்பட்டுள்ளன. சுருக்கத்திற்காக 1, 2, 3 என எண்கள் இடப்பட்டுள்ளன.