பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

48



காப்பியருடன் அகத்தியரிடம் கல்வி கற்றவர்களாம். இவர்கள் எல்லாருமே, தொல்காப்பியர் தொல்காப்பியம் இயற்றியது போல் ஆளுக்கோர் இலக்கண நூல் இயற்றினார்கள்; ஆனால் அவை நமக்குக் கிடைத்தில, இவர்தம் நூற்கட்கு முதல் நூலாக—ஆசிரியர் அகத்தியனாரால் இயற்றப்பட்டுத் திகழ்ந்த அகத்தியம் என்னும் தலைநூலே நமக்குக் கிடைக்கவில்லையே. தொல்காப்பியமாவது மறையாது கிடைத்திருப்பது ஒருவகையில் நமது பெரும்பேறே.

தொல்காப்பியர் தமது தொல்காப்பிய நூலை, ‘நிலந்தரு திருவிற் பாண்டியன்’ என்னும் மன்னனது அவையில், தம்நட்புப் புலவராகிய அதங்கோட்டாசான் முன்னிலையில் அரங்கேற்றினாராம். இச்செய்திகளை, பன்னிரு படலம் என்னும் நூலிலுள்ள

“ஆனாப் பெருமை அகத்தியன் என்னும்
அருந்தவ முனிவன் ஆக்கிய முதனூல்
பொருந்தக் கற்றும் புரைதப வுணர்ந்தோர்
நல்லிசை நிறுத்தத் தொல்காப்பியனும்...”

என்னும் பாயிரப் பாடற் பகுதியானும், புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலிலுள்ள

“மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன்
தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன்முதல்
பன்னிரு புலவரும்.........”

என்னும் பாடற் பகுதியானும், தொல்காப்பியருடன் பயின்றாண்பராகிய பனம்பாரனார் என்னும் புலவரால் சிறப்புப் பாயிரமாக இயற்றப் பெற்றுத் தொல்காப்பியத்துக்கு முன்னால் சேர்க்கப்பட்டுள்ளன.