பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

50



தொல்காப்பியத்தைப் பயன்படுத்தினர். தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்ட பேரவைக்குத் தலைமை தாங்கிய நிலந்தரு திருவிற் பாண்டியனும் தலைச்சங்க காலத்தைச் சேர்ந்தவனாக ஆராய்ச்சியாளர் சிலரால் அறிவிக்கப்பட்டுள்ளான். எனவே, எது எப்படியிருந்த போதிலும், இற்றைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முந்தியது தொல்காப்பியம் என உறுதியாகக் கூறலாம்; ஒரு தோற்றமாக மூவாயிரம் ஆண்டுகட்கு முந்தியது என்று மொழியலாம்; எனவே, தொல்காப்பியத்தின் காலம் ஏறத்தாழ கி. மு. 1000 ஆகும். ஐயாயிரம் ஆண்டுக்கு முந்தியது என்று மொழிவாருமுளர்.

நூலின் அமைப்பு,

தொல்காப்பியம் நூற்பா (சூத்திர) நடையாலானது. இஃது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் மூன்று பெரும் பிரிவுகளையுடையதென்பது முன்னரே கூறப்பட்டது. ஒவ்வோர் அதிகாரத்திலும் ஒன்பது இயல்கள் (உட்பிரிவுகள்) உள்ளன. ஆக மொத்தம் (3 x 9=27) இருபத்தேழு இயல்களையுடையது தொல்காப்பியம்.

எழுத்ததிகாரத்தில் எழுத்திலக்கணமும், சொல்லதிகாரத்தில் சொல்லிலக்கணமும், பொருளதிகாரத்தில் வாழ்வியல் இலக்கணமும் யாப்பிலக்கணமும் அணியிலக்கணமும் சொல்லப்பட்டுள்ளமை ஈண்டு மீண்டும் நினைவுகூரத்தக்கது.

இவற்றுள் சொல்லதிகாரத்திலுள்ள இடையியல், உரியியல் என்னும் இரு பகுதிகளிலும், பொருளதி-