பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

52



“மன்ற என்கிளவி தேற்றம் செய்யும்.”

“தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே.”

“கொல்லே ஐயம்.”

என்பன நூற்பாக்கள். இவ்வாறே மற்ற இடைச் சொற்களின் பொருள்களையும் தொல்காப்பிய இடையியலில் கண்டு கொள்க. எல்லா இடைச்சொற்களையும் எல்லாப் பொருள்களையும் ஈண்டுக் கூறமுடியாது என்று தொல்காப்பியரே எழுதியுள்ளார்.

உரியியல் :

சொற்பொருள் கூறும் துறையில் மிகவும் இன்றியமையாததான உரியியலில் ‘உறு’ என்னும் சொல் முதலாக ‘எறுழ்’ என்னும் சொல் ஈறாக நூற்றிருபது உரிச் சொற்கட்குப் பொருள் கூறியுள்ளார் தொல்காப்பியர். மாதிரிக்காகச் சில சொற்களின் பொருள்கள் வருமாறு:–

உறு, தவ, நனி என்னும் மூன்று உரிச்சொற்களும் ‘மிகுதி’ (அதிகம்) என்னும் பொருள் உடையனவாம்:

“உறுதவ நனியென வரூஉ மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப.”

என்பது நூற்பா. குரு, கெழு என்னும் சொற்கட்கு நிறம் என்று பொருளாம். செல்லல், இன்னல் என்னுஞ் சொற்கட்கு இன்னாமை (துன்பம்) என்று பொருளாம்: