பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

59

"தாயே பன்றி புலி முயல் நான்கும் ஆயுங் காலைக் குருளை என்ப" "நரியும் அற்றே நாடினர் கொளினே.” 'குட்டியும் பறழும் கூற்றவண் வரையார்.” 'பிள்ளைப் பெயரும் பிழைப்பாண் டில்லை கொள்ளுங் காலை நாயலங் கடையே.” என்பன நூற்பாக்கள். இப்படியே மற்ற மற்ற விலங்குகட்குரிய மற்ற மற்ற இளமைநிலைப் பெயர்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. பின்வரும் நூற்பாவில் பறவை - விலங்குகளின் ஆண்பாற் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன: “எருதும், ஏற்றையும், ஒருத்தலும், களிறும் சேவும், சேவலும், இரலையும், கலையும், மோத்தையும், தகரும், உதளும், அப்பரும், போத்தும், கண்டியும், கடுவனும், பிறவும் யாத்த ஆண்பாற் பெயரென மொழிப.” பின்வரும் நூற்பாவில் பறவை - விலங்குகளின் பெண்பாற் பெயர்கள் பேசப்பட்டுள்ளன: "பேடையும், பெடையும், பெட்டையும்; பெண்ணும், மூடும், நாகும், கடமையும், அளகும், மந்தியும், பாட்டியும், பிணையும், பிணவும், அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே." இவற்றுள் இந்த இந்தப் பெயர்கள் இந்த இந்த ஆண் பறவைக்கும், ஆண் விலங்கிற்கும் உரியன என்றும், இன்னின்ன பெயர்கள் இன்னின்ன பெண் பறவைக்கும், பெண் விலங்கிற்கும் உரியன என்றும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.