பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

61

முதலிய சொற்களைக் குறிக்க ஆங்கில மொழியில் Leaf என்னும் ஒரே சொல்தான் உள்ளமை ஈண்டு ஒப்பு நோக்கற்பாற்று. மற்றும், ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என்னும் எண்களால் சுட்டப்படும் ஒரு சார் தொகைப் பெயர்கள் மரபியலில் விளக்கப்பட்டுள்ளன. அவையாவன: ஓர் அறிவு என்பது உற்றறியும் (தொட்டுணரும்) தோல் அறிவு; ஈரறிவு என்பன அதைேடு (தோல் அறிவோடு) காக்கறிவு; மூவறிவு என்பன அவற் றோடு முக்கறிவு; காலறிவு என்பன அவற்றோடு கண்ணறிவு; ஐயறிவு என்பன அவற்றோடு செவியறிவு, ஆறறிவு என்பன அவற்றோடு மன அறிவு :- "ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனோடு நாவே மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே ஆறறி வதுவே அவற்றோடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே." என்பது நூற்பா. ஒரறிவுடைய உயிர்கள் புல், மரம் முதலியன. ஈரறிவுடையவை கந்து (கத்தை), முரள் (இப்பி) முதலியன. மூவறிவின சிதல் (கறையான்), எறும்பு முதலியன. காலறிவின கண்டு, தும்பி முதலியன. ஐயறிவின மா (விலங்கு), புள் (பறவை) முதலியன. ஆறறிவின மக்கள், ஒருசில உயர் அறிவுடைய விலங்குகள் முதலிய உயிர்கள்: