பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

62

62

“புல்லும் மரனும் ஒரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே." "தந்தும் முரளும் ஈரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே." "சிதலும் எறும்பும் மூவறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே." "நண்டும் தும்பியும் நான்கறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.", "மாவும் புள்ளும் ஐயறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே." "மக்கள் தாமே ஆறறி வுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.” "ஒருசார் விலங்கும் உளவென மொழிப."

என்பன நூற்பாக்கள். இப்படி இன்னும் பல பெயர் விளக்கங்கள் மரபியலில் தரப்பட்டுள்ளன.

முப்பெரும் பிரிவுகள்

தொல்காப்பியத்திற்குப் பின்னெழுந்த நிகண்டு நூற்கள் மூன்று பெரும் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு தோன்றியனவாம். அம் முப்பெரும் பிரிவுகள் தொல்காப்பியத்திலிருந்தே உறிஞ்சி எடுக்கப்பட்டன. அவ்விவரம் வருமாறு:

மேலே, தொல்காப்பிய இடையியல், உரியியல், மரபியல் ஆகியவற்றிலிருந்து சில சொல்-பெயர்பொருள் விளக்கங்களைக் கண்டோம். கூர்ந்து நோக்குவோர்க்கு, அச்சொல்-பெயர்-பொருள் விளக்கங்களில் மூன்று கூறுகள் இலைமறை காய்களாக மறைந்து கிடப்பது புலனாகும். அவையாவன: