பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

66

66

நன்னூல் என்னும் இலக்கண நூல் யாத்த பவணந்தி முனிவரும் தத்தம் நூற்களினிடையே தொல்காப்பிய நூற்பாக்கள் சிலவற்றை அப்படியே எடுத்துச் சேர்த்துக்கொண்டுள்ளனர். பிற்காலத்திய ஆசிரியர்கள் சிலரும் இப்பாதையில் சென்றுள்ளனர்.

இவ்வாறு தமிழ்ப் புலவோர் பலரும், குறிப்பிட்ட தொல்காப்பிய இலக்கணத்தைப் பின்பற்றித் தமிழ் மொழியை வளர்த்து வந்ததனால், ஆங்கில மொழியில் நூற்றாண்டுக்கு நூற்றாண்டு தோன்றிய நூற்களினிடையே, இது வேறுமொழியோ அது வேறுமொழியோ என்று ஐயுறக் கூடிய அளவிற்கு நடைவேறுபாடு காணப்படுவதுபோல், மூவாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய தொல்காப்பிய நூல்நடைக்கும் இன்று தோன்றும் தமிழ்நூல் நடைக்கு மிடையே பெருத்த வேறுபாடு காணப்படவில்லை. இது தமிழ் மொழிக்கும் ஒரு சிறப்பேயாகும்.

இடைவெளி நூற்கள்

கிடைத்திருக்கும் தமிழ் நூற்களுள் சொற் பொருள் கூறும் துறையில் முதல்நூல் தொல்காப்பியம்; இரண்டாவது நூல் சேந்தன் திவாகரம். தொல்காப்பியமோ கி.மு. ஆயிரம் ஆண்டுகட்குமுன் அதாவது மூவாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றியது; சேந்தன் திவாகரமோ கி.பி. எட்டாம் நூற்றாண்டில்-அதாவது-ஆயிரத்து இருநூறு ஆண்டுகட்கு முன் தோன்றியது. அப்படியெனில், இரண்டுக்கும் நடுவே ஆயிரத்தெண்ணுாறு - அல்லது - ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகால இடைவெளி உள்ளமை புலனாகும். இந்தப் 'பசிபிக்' இடைவெளியில்,