பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

83



வகை இலக்கியங்கள் ஆகியவற்றின் வாயிலாக இவ்வரலாற்று நிகழ்ச்சிகள் ஒரு தோற்றமாக (உத்தேசமாக) நுனித்து (யூகித்து) உணரப்படுவனவாகும். வைகறையில் பனிமூட்டத்தில் பொருள்கள் தெளிவாகத் தெரியாமல் ஒரு தோற்றமாகத்தானே தெரியும்? அதுபோலவே இவையுமாதலின், இவை இரண்டாம் வகையன. அடுத்து, சிந்துவெளி நாகரிகம், பழைய எல்லம்—பாபிலோன் நாகரிகங்க்ள் முதலிய வரலாற்றுக் குறிப்புக்கள் மூன்றாம் வகையைச் சார்ந்தவை. விளக்கு வசதியும் இல்லாதவிடத்தில் அமாவாசை நள்ளிரவில் பொருள்கள் தெரியவே தெரியா; தடவிப் பார்த்தே தெரிந்து கொள்ள வேண்டும்; அதுபோலவே, சிந்துவெளி நாகரிகம் முதலியன, முன்னமேயே எழுதி வைத்துள்ள பழைய வரலாற்றுக் குறிப்பு எந்த உருவத்திலும் ஒரு சிறிதும் இன்மையால், நிலத்தைத் தோண்டி எடுத்துக் கண்ட பொருட்கள் வாயிலாகவும் பழைய கட்டடங்கள்—இடிபாடுகள் வாயிலாகவும் இன்ன பிற பொருட்கள் வாயிலாகவுமே அறிந்து கொள்ளப்படுவதால், இவை மூன்றாம் வகையனவாகும்.

மேற்கூறிய மூன்று வகையுள் சேந்தன் வரலாறு இரண்டாம் வகையைச் சார்ந்ததாகும். எப்படியெனில், முதல் வகையைப்போல் சேந்தனைப் பற்றி முறையான வரலாறு எழுதி வைக்கப்படவும் இல்லை; மூன்றாம் வகையைப் போல் சேந்தனைப் பற்றி எழுத்துச் சான்று ஒரு சிறிதும் கிடைக்காமலும் இல்லை. எனவே இரண்டாம் வகையைப் போல், திவாகரம் போன்ற நூற்களின் வாயிலாகச் சேந்தனைப் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில செய்திகள் அறியக் கிடக்கின்றன. கிடைத்தவரைக்கும் மனநிறைவு கொள்ள வேண்டியதுதான்! இந்த இரண்டாம் வகை