பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

86

86

7. "முற்றவப் பயனே கற்றவப் பயனே சாபத் திழுக்கிய தேவ சாதரில் தோற்றம் உடையனென அம்பல் தோன்றிய இயற்கைச் சேந்தன்”. 8. "மறக்குறும்பு ஒட்டி அறத்தின் வழிநின்று கவிகைத் தண்ணளி புவிபெற ஆணையின் ஐம்புலன் ஆளும் அம்பற் கோமான் திண்பெருஞ் சேந்தன் திவாகரம்". 9. "அண்ணல் செம்பாதிக் காணி யாட்டியைப் பெண்ணனங்கை மூவுலகும் பெற்ற அம்மையைச் செந்தமிழ் மாலை அந்தாதி புனைந்த நாவலன் அம்பற் காவலன் சேந்தன்". 10. ".அரக்கரைப் பொருத முரட்போர் வில்லும் பாரதம் பொருத பேரிசைச் சிலையும் தாருகற் கடிந்த வீரத் தயிலும் பாடிய புலவன் பதிஅம்பற் சேந்தன் பயில் வுற்ற திவாகரம்". 11. "புலவி நீக்கிய கல்விச் செல்விக்கு அமிழ்து சுவை ஈந்த அரும்பெறல் இன்பத்து ஒருபெருஞ் செல்வன் அருவந்தைச் சேந்தன் பகர்வுற்ற திவாகரம்”. 12. "செம்பொற் கிடையான் அம்பற் சேந்தன் நன்ன ராளன் நலமிகு நாட்டத்தன்”.

இவை பன்னிரண்டும் சேந்தனைப் பற்றிய திவாகரப்பாடல் பகுதிகளாகும். இனி இவற்றின் சில பகுதிகள் குறித்துச் சிறிது ஆய்வோம்:

எடுத்ததும் முதல் தொகுதிப் பாடலில் 'வடநூற்கு அரசன்’ என்று சேந்தன் சிறப்பிக்கப் பெற்றுள்ளான்