பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

87

இதிலிருந்து, வடமொழியில் இவனுக்கிருந்த பெரும் புலமை புலப்படும். மேலும், இக்காலத்தில் தமிழகத்தில் ஆங்கிலம் பெற்றுள்ள மதிப்பை அக்காலத்தில் வடமொழி பெற்றிருந்தது. இப்பொழுது ஆங்கிலம் படித்தால் சிறப்பு என்பதுபோல, அப்பொழுது வடமொழி படித்திருந்தால் சிறப்பு. இன்று A, B, C, D, முதலிய இருபத்தாறு ஆங்கில எழுத்துக்களை மாற்றி மாற்றிப் பின்னிப் பின்னிப் பிணைத்துப் பெயருக்குப் பின்னால் பட்டமாகப் போடுவதில் பெருமை காண்பது போல, அன்று வடமொழி படித்தவர் என்று விளம்பரம் செய்வதில் பெருமை காணப்பட்டது. எனவே, சேந்தன் இத்தகுதியிலும் மிக்கவனாகத் திகழ்ந்தான்.

மூன்றாம் தொகுதிப் பாடலில், 'காதலி கையிற். போதிப் பெருந்தவன்' என்று சேந்தன் குறிப்பிடப்பட்டிருப்பது குழப்பம் தருகிறது. 'போதிப் பெருந்தவன்' என்றால், போதி மரத்தின் கீழ்ப் பெருந்தவம் புரிந்த புத்த பகவான்தான். இந்தத் தொடரில் புத்த பகவானாக உருவகிக்கப்பட்டிருப்பதைக்கொண்டு இவனைப் புத்த மதத்தினன் என்று கூறிவிடக் கூடாது. ஏன் எனில், ஒன்பதாவது தொகுதிப் பாடலில் கூறியுள்ளாங்கு, சிவனது இடப்பாகங் கொண்டிருக்கும் அம்மையின்மேல் இவன் செந்தமிழ் மாலை அந்தாதி நூல் பாடியிருப்பதாலும், சேந்தனைக் கந்தனைச் 'செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர் வேல் வேந்தனே' என்று முருகனை அருணகிரியார் குறிப்பிட்டுள்ளாங்கு முருகனது பெயராகிய 'சேந்தன்' என்பதை இவன் வைத்துக்கொண்டிருப்பதாலும் இவன் சைவ சமயத்தினனேயாவான். அப்படியெனில், 'காதலி கையிற் போதிப் பெருந்தவன்' என்னும் தொடருக்கு நாம்