பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

89

ஒரு சாபம் காரணமாக மண்ணுலகிற்கு வந்துவிட்ட ஒரு தேவனே என்று எண்ணும்படியான கவர்ச்சியான தோற்றமுடையவன் என்னும் கருத்தை, 'சாபத்திழுக்கிய தேவ சாதரில் தோற்றம் உடையன்' என்னும் பகுதி உணர்த்துகின்றதன்றெ? ஆனால் அவன் உண்மையில் அப்படி வந்தவனல்லன்; இயற்கையாகவே பேரழகு மிக்க மாந்தனேயாவான் என்னும் கருத்தை இயற்கைச் சேந்தன் என்னும் தொடர் உணர்த்துகிறது.

சேந்தன் திவாகரம் என வெறும் பெயருக்கு மட்டும் உரியவன் அல்லன் சேந்தன் திவாகர நிகண்டோடு இவனுக்கு நெருங்கிய தொடர்புண்டு; அதாவது, திவாகரத்தை இவன் நன்கு தெரிந்து ஆராய்ந்து பயின்று பலர்க்கும் எடுத்துச் சொல்லியும் உள்ளான் என்பதை, 'சேந்தன் ஆய்ந்த திவாகரம், சேந்தன் தெரிந்த திவாகரம், சேந்தன் பயில்வுற்ற திவாகரம், சேந்தன் பகர்வுற்ற திவாகரம்’ என்னும் பாடற் பகுதிகளால் அறியலாம். இறுதியாக, சேந்தனது ஊர் பற்றியும் பேர் பற்றியும் காலம் பற்றியும் உள்ள சிக்கலைச் சிறிது ஆய்ந்து விட்டு இவ் வரலாற்றை முடித்துக் கொள்ளலாம்:

காவிரிப் பகுதியைச் சேர்ந்த 'அம்பல்' என்னும் ஊரும் 'அருவந்தை' என்னும் ஊரும் சேந்தனுக்கு உரியவை என்னும் கருத்து, (1) 'அம்பற் கிழவோன் சேந்தன்', (2) 'அருவந்தை தேறுங் காட்சிச் சேந்தன்', (4) 'அருவந்தைச் சேந்தன்', (6) 'காவிரிப் பெரும்பதி அம்பற்கு அதிபதி சேந்தன்', (7) அம்பல் தோன்றிய சேந்தன் முதலிய திவாகரப் பாடல் பகுதிகளால் தெளியப்படும். ஆனல், புறநானூறு—385—ஆம்