பக்கம்:தமிழ் அங்காடி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8 தமிழ் அங்காடி


முடியும் - இது பொருத்தமான அமைப்பே - என்பது இவரது கொள்கை.

அறிவியல் ஆய்வுகள் ஆய்வுக் கூடங்களில் நடைபெறும். ஆனால், அரிஸ்ட்டாட்டிலின் உயிரியல் ஆய்வுகள் வெளியிடங்களில் நடைபெற்றன. உலகின் முதல் 'இயற்கை வரலாற்று ஆசிரியர்’ என இவர் பாராட்டப்பட்டுள்ளார்.

கொள்கைகள்

அரிஸ்ட்டாட்டிலின் கொள்கைகள் சில வருமாறு:

புற உலக இயற்கையின் கூறுகளை முதன்மையாக ஆராய்பவர் இவர்.

அக உலக ஆராய்வு மேதையான சாக்ரடீசின் மாணாக்கராகிய பிளேட்டோவின் மாணக்கர் இவராதலின், அக உலக ஆய்விலும் ஒரளவு ஈடுபாடு கொண்டவர்.

ஒரு செயல் நிகழ்வதற்கு உரிய மூலம் அதாவது காரணம் என்ன என்பதை ஆராயவேண்டும் என்பார்.

ஒரு பொருளின் இயல்பை ஆராய, அது எதனால் ஆனது - எந்த விதமான உரு உடையது - எந்தக் கருவி கொண்டு செய்யப்பட்டது - யாரால் செய்யப்பட்டது என்பவற்றை அறியவேண்டும் என்பார்.

அறத்துறையை எடுத்துக் கொள்ளின், எதுவும் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கக் கூடாது - நடு நிலையினதாக இருக்கவேண்டும். எடுத்துக்காட்டு: அஞ்ச வேண்டியதற்கு எந்த அளவு அஞ்ச வேண்டுமோ - அந்த அளவு அஞ்ச வேண்டும். தேவையின்றி அளவு மீறி அஞ்சுவதும், அஞ்சாமல் இருப்பதும் கூடா; அளவாய் அஞ்ச வேண்டும். ‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை’ என்றார் வள்ளுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/10&oldid=1202966" இலிருந்து மீள்விக்கப்பட்டது