பக்கம்:தமிழ் அங்காடி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  109


"தகை உறு தம்முனைத் தாயைத் தந்தையை
மிகைஉறு குரவரை உலகின் வேந்தனைப்
பகைஉற வருதலும் துறந்த பண்பிது
நகையுறல் அன்றியும் நயக்கற் பாலதோ" (61)

குரவர் = உயரிய மேலோர். ஐம்பெருங் குரவருள் அண்ணனும் ஒருவர். இராவணனுக்குப் பகையாக நாம் (இராமன், சுக்கிரீவன் முதலியோர்) வந்திருக்கும் இப்போது, அண்ணனுக்கு உதவியாக இருக்க வேண்டியவன் நம்மிடம் வந்துள்ளான் என்றால் அவனை எவ்வாறு நம்புவது? இங்கே நகையுறல் என்பது எள்ளல் காரணமாக வந்தது.

நல்ல நேரத்தில் அண்ணனோடு உறைந்து உண்டு மகிழ்ந்திருந்தவன், பகை வந்துழி அண்ணனுடன் சேர்ந்து பகைவரோடு போரிட்டு மாளாமல், பகைவருடன் சேர்ந்து கொள்வதா ஆண்மையாகும்?

"வேண்டுழி இனியன விளம்பி, வெம்முனை
பூண்டுழி அஞ்சி, வெஞ்செருவில் புக்கு உடன்
மாண்டொழிவின்றி நம் மருங்கு வந்தவன்
ஆண்தொழில் உலகினுக்கு ஆணிஆம் அன்றே"

(62)

வீடணனது வருகை, உலக ஆண்மைக்கே, உலக மறவர்கட்கே இழிவு என்கிறான். ஈண்டு,

"உறினட்டு அறின் ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்" (812)


"அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை" (814)

என்னும் குறள்கள் எண்ணத் தக்கன.

மேலும் தொடர்கிறான் சுக்கிரீவன்: அண்ணனுக்கே உதவாத வீடணன் வேறு யாருக்கு உதவுவான்? அரக்கரைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/111&oldid=1203481" இலிருந்து மீள்விக்கப்பட்டது