பக்கம்:தமிழ் அங்காடி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114  தமிழ் அங்காடி


"முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்
காயினும் தான்முங் துறும்” (707)

என்னும் குறள் ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. அதாவது: ஒருவர் உவந்து (மகிழ்ந்து) பேசினும் அல்லது காய்ந்து (வெறுத்துப்) பேசினும், அவர் பேசுவதற்கு முன்பே, அவரது உவப்பையோ அல்லது காய்தலையோ முகம் அறிவித்து விடும் என்பது குறள் கருத்து. இந்தக் குறளின் அடிப்படையிலேயே,

"உள்ளத்தின் உள்ளதை உரையின் முந்துற
மெள்ளத் தம் முகங்களே விளம்பும்” (89)

என்று அனுமன் கூற்றில் வைத்துக் கம்பர் பாடியுள்ளார்.

மேலும் கூறுகிறான்: வாலி விண் பெறவும் சுக்கிரீவன் அரசு பெறவும் செய்த நின் வில்லின் வலிமையையும் வெற்றியையும் பண்பையும் வீடணன் அறிந்து, நாமும் இராமனை அடைந்தால் அரசு பெறலாம் என விரும்பி வந்துள்ளான்.

"வாலி விண்பெற, அரசு இளையவன் பெறக்
கோலிய வரிசிலை வலியும் கொற்றமும்
சீலமும் உணர்ந்து நிற்சேர்ந்து தெள்ளிதின்
மேல் அரசு எய்துவான் விரும்பி மேயினான்" (90)

இளையவன் = சுக்கிரீவன். வாலிக்கு இராமன் தீமை செய்தது போல் அறிவிக்காமல், வாலி வீடு பேறு அடையும் படியான நன்மை செய்ததான பொருளில் 'வாலி விண் பெற' என்று கூறியிருப்பது நயமானது. இராவணனது கொடுமையை வெறுத்து வீடணன் இராமன் பக்கம் வந்தான் என்று சொல்வது ஒருபுறம் இருக்க, இலங்கை அரசைப் பெறவே வீடணன் வந்தான் எனப் பச்சையாக - வெட்ட வெளிச்சமாக அனுமன் கூறியிருப்பது வியப்பாயுள்ளது. அரசு எய்தலாம் எனத்தெளிவான உறுதியுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/116&oldid=1203488" இலிருந்து மீள்விக்கப்பட்டது