பக்கம்:தமிழ் அங்காடி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116  தமிழ் அங்காடி



மேலும் சொல்கிறான். பகைப் பாசறையில் உள்ளவர் எல்லாரையுமே பகைவர் என ஒதுக்கி விடுவது நகைப்புக்கு உரியதாகும். பகைவர் சிலரை நண்பராக்கிக் கொள்ள வேண்டும். உறவினர் எல்லாரும் எப்போதும் ஒற்றுமையுடன் இருப்பரா? தாய உறவுடைய தந்தை, உடன் பிறந்தார் ஆகியோர், குறிப்பிட்ட பொருளைப் பெறப் போட்டி போடுவரேல் ஒருவர்க்கொருவர் பகையாகி விடுவதுண்டு.

"பகைப் புலத்தோர் துணையல்லர் என்றிவனைப்
பற்றேமேல் அறிஞர் பார்க்கின்
நகைப் புலத்த தாமன்றே நல்தாயம்
உளதாய பற்றால் மிக்க
தகைப் புலத்தோர் தந்தையர்கள் தம்பியர்கள்
தமையரிவர் தாமே யன்றோ
மிகைப் புலத்து விளைகின்ற தொரு பொருளைக்
காதலிக்கின் விளிஞர் ஆவர்" (102)

தாயம் = சொத்துரிமை - பங்காளித் தன்மை, விளிஞர் = மாறு பட்ட பகைவர்.

பகைவருள் சிலரை நட்புடையராக்கிக் கொண்டு பிளவு படுத்தினால் நன்மை உண்டாகும். இங்கே,

"நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்" (379)

என்னும் குறள் ஒப்பிட்டு எண்ணத்தக்கது. பெற்ற தந்தை பகையாகா விடினும், சிறிய தந்தை பெரிய தந்தையாகிய பங்காளித் தந்தையர்கள் சொத்துரிமை தொடர்பாகப் பகைவராகலாம் அல்லவா? ஏன் - பெற்ற தந்தையே தனக்குச் சொத்து தருவதில் நடுநிலைமையா யிருக்க மாட்டாரெனச் சொந்தத் தந்தையையே கொன்றவர் உண்டு. ஒளரங்கசீப் என்னும் மன்னன் தன் தந்தையைச் சிறையிலிட்டதாகவும், உடன் பிறந்தவர்களை வீழ்த்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/118&oldid=1203494" இலிருந்து மீள்விக்கப்பட்டது