பக்கம்:தமிழ் அங்காடி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122  தமிழ் அங்காடி


பகல் என்பதற்கு ஞாயிறு என்னும் பொருள் உள்ளதை மணிமேகலையில் உள்ள

“பன்மலர்ப் பூம்பொழில் பகல் முளைத்ததுபோல்”
(4:92)

என்னும் பாடல் பகுதியால் அறியலாம். எல்லிநாதன், எல்லி நாயகன் என்றால் திங்கள் இங்கே சூழ்நிலையைக் கொண்டும் ஆகுபெயராகவும் எல்லி என்பதற்குத் திங்கள் எனப் பொருள் கொள்ளல் வேண்டும். சூழ்நிலை என்பது, ஒரே நேரத்தில் இரண்டும் தெரிவதுதான். பகல் = ஞாயிறு எனில் மற்றொன்று திங்களாகும்.

ஒரே நேரத்தில் (மாலையில்) கிழக்கே திங்களையும் மேற்கே ஞாயிறையும் பார்க்க முடியும் என்பதற்கு, இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் சில இலக்கிய ஆட்சிகள் காண்போம்.

சிலப்பதிகாரத்தில்:-

"வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மலயத்து உச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து"
(11:41 – 44)

பரிபாடலில்:-

"பருவம் வாய்த்தலின் இருவிசும்பு அணிந்த இருவேறு மண்டிலத்து இலக்கம் போல நேமியும் வளையும் ஏந்திய கையால்"

(13:7 - 9)

(இருவேறு மண்டிலம் = ஞாயிறும் திங்களுமாம்).

மணிமேகலையில்:-

"புலவரை இறந்த புகார் எனும் பூங்கொடி (5:109)
குணதிசை மருங்கில் நாள் முதிர் மதியமும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/124&oldid=1203503" இலிருந்து மீள்விக்கப்பட்டது