பக்கம்:தமிழ் அங்காடி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  123


குடதிசை மருங்கில் சென்றுவீழ் கதிரும்
வெள்ளிவெண் தோட்டோடு பொன் தோடாக”

(5:119 - 121)

இத்தகைய செய்தி ஒன்று 'லார்டு டென்னிசன்' (Lord Tennyson) இயற்றிய The Lotos Eaters’ என்னும் ஆங்கிலப் பாடல் ஒன்றிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது::

யூலிசெஸ் (Ulysses) என்னும் கிரேக்க மன்னனின் போர் மறவர்கள், ஆசியா மைனரில் உள்ள எதிரியின் ‘ட்ராய்' (Troy) என்னும் பகுதியை வென்று தமது 'இதாகா' (Ithaca) என்னும் பகுதிக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த வழியில் ஒரு தீவில் தங்கினார்களாம். அவர்கள் அத்தீவில் மாலையில் ஞாயிறுக்கும் திங்களுக்கும் இடையே அமர்ந்திருந்தார்களாம்.

“They Sat them down upon the yellow Sand
Between the Sun and moon upon the Shore”

(5 : 1,2)

என்பது பாடல் பகுதி. கம்பர் இத்தகைய காட்சியை உள்ளத்தில் கருதித் தான்,

"ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற இருவரும்

ஒருநாள் உற்ற

எல்லியும் பகலும் போலத் தழுவினர்"

என்று பாடினார். 'உணர்வும்' என்பதில் உள்ள'உம்’ என்பது, இனி உடம்பாலும் ஒன்றப் போகின்றனர் என எதிரதைத் தழுவுவதால், எதிரது தழீஇய எச்ச உம்மை, எனப்படும்.

பின்னர், சுக்கிரீவன் வீடணனை நோக்கி, இராமர் உன்னை அடைக்கலமாக ஏற்றுக் கொண்டார்; உன்னை அழைத்துவரச் சொன்னார் என அன்புடன் கூறினான். இதைக் கேட்ட வீடணன், மிகவும் மகிழ்ந்து, இராம பிரானைக் காணும் பெரும்பேறு என் அண்ணனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/125&oldid=1203506" இலிருந்து மீள்விக்கப்பட்டது